Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

எனக்கு வழி விடு…. பேருந்து மீது கல்லை எரிந்த வாலிபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பேருந்தின் கண்ணாடியை உடைத்த வாலிபர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள நெருஞ்சிப்பேட்டை சாலையில் திருப்பூரில் இருந்து  பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் பேருந்தை முந்தி செல்ல வேண்டும் என  ஹாரன்  அடித்துள்ளார். ஆனால் பேருந்து ஓட்டுநர் சக்திவேல் வழி கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் பேருந்தின் குறுக்கே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அருகில் இருந்த கல்லை கொண்டு பேருந்தின் முன்பக்க கண்ணாடி மீது வீசியுள்ளார். இதில் பேருந்தின் கண்ணாடி  சேதம் அடைந்துவிட்டது.

இதுகுறித்து பேருந்து ஓட்டுநர் சக்திவேல் உடனடியாக போக்குவரத்து துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் பேருந்தை  ஆய்வு செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர்  தீவிர நடவடிக்கை மேற்கொண்டு  வருகின்றனர்.

Categories

Tech |