தாய்-மகள் இருவரையும் கொலை செய்த மீன்பிடி தொழிலாளியை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ராஜாக்கமங்கலம் பகுதியில் சகாயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவுலின் மேரி(48) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஆலன்(25), ஆரோன்(19) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். தற்போது சகாயராஜ் ஆலனும் வெளிநாட்டில் தங்கி வேலைப்பார்த்து வருகின்றனர். ஆரோன் சென்னையில் இருக்கும் கல்லூரியில் படித்து வருகிறார்.
இந்நிலையில் பவுலின் மேரிக்கு துணையாக அவரது தாய் திரேசம்மாள்(90) உடன் இருந்துள்ளார். கடந்த 7-ஆம் தேதி மர்ம நபர்கள் தாய், மகள் இருவரையும் கொன்றுவிட்டு அவர்கள் அணிந்திருந்த 15 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் சந்தேகப்படும்படியாக அம்மாண்டிவிளை பகுதியில் நின்று கொண்டிருந்த ஒருவரை காவல் துறையினர் படித்து விசாரித்தனர். அந்த விசாரணை அவர் மீன்பிடி தொழிலாளியான அமலசுமன்(36) என்பது தெரியவந்துள்ளது. இவர்தான் பவுலின் மேரி மற்றும் திரேசம்மாளை கொலை செய்தது தெரியவந்துள்ளது. அதாவது அமலசுமனின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். அவ்வபோது அமலசுமன் பவுலின் மேரி வீட்டு வழியாக செல்வது வழக்கம்.
அப்போது பவுலின் மேரியின் தையல் வகுப்பில் பங்கேற்று விட்டு வெளியே வந்த இளம்பெண் ஒருவரை அமலசுமன் கிண்டல் செய்துள்ளார். இதனைப் பார்த்த பவுலின் மேரி அமலசுமனை அழைத்து கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த அமலசுமன் தாய் மகள் இருவரையும் சுத்தியலால் தாக்கியுள்ளார். பின்னர் அயன் பாக்ஸ் ஒயரால் இருவரின் கழுத்தையும் நெரித்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.