திடீரென சம்பளத்தை உயர்த்தியுள்ளார் நடிகர் பிரபாஸ்.
பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்தவர் பிரபாஸ். இதையடுத்து அவர் நடிப்பில் வெளியான சாஹோ, ராதேஷ்யாம் உள்ளிட்ட திரைபடங்கள் தோல்வியடைந்தாலும் அவரின் சம்பளம் அதிகமாகத்தான் இருந்து வருகின்றது. பிரபாஸ் தற்பொழுது ஆதிபுருஷ் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தை ஓம் ரவுத் இயக்குகின்றார். ராமாயண கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்படுகிறது.
இத்திரைப்படத்தில் பிரபாஸ் ராமராக நடிக்கின்றார். இந்த நிலையில் இத்திரைப்படத்திற்கு பிரபாஸூக்கு நூறு கோடி சம்பளம் பேசப்பட்ட நிலையில் தற்போது மேலும் 20 கோடி ரூபாய் உயர்த்தி கேட்டு இருக்கின்றார். இதனால் தயாரிப்பாளருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை 500 கோடி பொருட் செலவில் எடுத்து வருகின்ற நிலையில் பிரபாஸ் சம்பளத்தை உயர்த்தி இருப்பதால் தயாரிப்பாளருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தயாரிப்பாளர் இதுவரை பிரபாஸின் கோரிக்கையை ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.