வில்லங்கமாக சின்மயிடம் வாழ்த்துக்கூறி வாங்கிக் கட்டிக்கொண்டார் நெட்டிசன்.
தமிழ் சினிமாவில் பிரபல பாடகியாகவும், டப்பிங் கலைஞராகவும் வலம் வந்தவர் சின்மயி. ஏ. ஆர் ரகுமான் இசையில் பல பாடல்களை பாடியுள்ளார். பின்னணி பாடகியாக மட்டுமல்லாமல் நயன்தாரா, சமந்தா, தமன்னா என முன்னணி நடிகைகளுக்கும் இவர் டப்பிங் கொடுத்திருக்கிறார். பல ஆண்டுகளாக குழந்தை பெறாமல் இருந்த நிலையில் தற்போது தான் தாயாகி விட்டேன் என்ற சந்தோச செய்தியை அவர் கூறியுள்ளார்.
இவர் நடிகரும், இயக்குநருமான ராகுல் ரவீந்திரனுக்கும் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்நிலையில் கர்ப்பமான சின்மயி இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைக்கு தாயாகியிருக்கிறார். தன் குழந்தைகளின் கைகளை மட்டும் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார் சின்மயி.
இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றார்கள். மேலும் பலர் கர்ப்பமாக இருந்ததே தெரியவில்லையே. வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றீர்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர். இதை மறுத்து தனக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டும்தான் கர்பமாக இருந்தது தெரியும் என கூறியுள்ளார் சின்மயி.
இந்தநிலையில் நெட்டிசன் ஒருவர் இரண்டு குழந்தைகளையும் வைரம் மற்றும் முத்து போல் பார்த்துக் கொள்ளுங்கள் என கமெண்ட்டில் தெரிவித்த நிலையில் அதற்கு உன்னலாம் பெத்தாங்க பாரு, அவங்கள சொல்லணும் என சாடினார். அதற்கு அந்த நெட்டிசன் வாழ்த்தியது ஒரு குத்தமா என கூறினார். மேலும் வைரம் மற்றும் முத்து என கூறியதை அக்கா வைரமுத்து என நினைச்சுட்டாங்க போல. எப்ப பார்த்தாலும் அதே நெனப்பு என மேலும் விமற்சித்தார். இதனால் கடுப்பான சின்மயி அவரை போலவே உங்க வீட்டுல பிள்ளைகள் பிறக்கட்டும். அவர் நினைப்பாவே இருக்க வாழ்த்துக்கள் என கூறி பதிலடி தந்துள்ளார்.