Categories
தேசிய செய்திகள்

FLASH NEWS: அதிகரிக்கும் கொரோனா…. மாநிலங்களுக்கு அரசு அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முதலில் 100 கீழிருந்த தொற்று தற்போது 500 தாண்டி பதிவாகி வருகிறது.  இந்நிலையில் சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. தொற்று கண்டறியப்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளை அதிகப்படுத்த சுகாதாரத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். தமிழ்நாட்டில் பிஏ5 என்ற ஒமைக்ரான் பாதிப்பு 25 சதவீதம் வரை தற்போது பரவி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை தொடர்ந்து செய்தாலே கொரோனா தொற்றை தடுக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

இவ்வாறு தமிழ்நாடு மட்டுமின்றி மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா அதிகரித்து வருவதால் கொரோனா பரவல் அதிகம் உள்ள மாவட்டங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் பூஸ்டர் தடுப்பூசி உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளை அதிகப்படுத்தவும் மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |