Categories
மாநில செய்திகள்

CORONA : இன்று முதல் இது கட்டாயம்….. தமிழக அரசு திடீர் உத்தரவு….!!!!

தமிழகத்தில் இன்று முதல் பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  முதலில் 100-க்கு கீழ் இருந்த கொரோனா தொற்று தற்போது 500 தாண்டி பதிவாகி வருகின்றது. இதற்கு தமிழக அரசு மற்றும் சுகாதாரத் துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பொது இடங்களில் பொதுமக்கள் கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதாரத் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் கடைகள். வணிக வளாகங்களில் தடுப்பு விதி முறையை கடைபிடிக்க வேண்டும். கொரோனா நடவடிக்கைகள் அனைத்து மாவட்டங்களிலும் தீவிரப்படுத்தப்படும் என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.  எனவே இன்று முதல் தமிழகத்தில் பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |