சென்ற 2020 ஆம் வருடம் சீன நாட்டில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதும், அங்கு பயின்றுக்கொண்டிருந்த 23 ஆயிரத்துக்கும் அதிகமான இந்திய மாணவர்கள் அவசரமாக இந்தியாவுக்கு திரும்பினர். சீன நாடு கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கியதாலும், விமானங்கள் நிறுத்தப்பட்டதாலும் இந்திய மாணவர்கள் மீண்டுமாக அங்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இது தொடர்பாக முன்பே சீனாவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த நிலையில் சீனாவுக்கான இந்திய தூதர் பிரதீப்குமார் ராவத், வெளியுறவு மந்திரி வாங்யியை சந்தித்து பேசினார். அதன்பின் இந்திய மாணவர்களை சீனாவிற்கு வரஅனுமதிப்பது தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்திய தரப்பின் கவலைகளுக்கு சீனா முக்கியத்துவம் வழங்குவதாகவும், விரைவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் எனவும் வாங்யி கூறினார். அதுபோன்று இந்தியா-சீனா இடையில் மீண்டுமாக விமான போக்குவரத்து துவங்குவது தொடர்பாகவும் இருவரும் விவாதித்தனர்.