பள்ளத்தில் விழுந்த லாரியை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் மீட்டுள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூர் பெருமாள் கோவில் பகுதியில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக நேற்று லாரி ஒன்று சிமெண்டு கலவைகளை ஏற்றி கொண்டு வந்தது. அப்போது திடீரென லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வடிகால்வாய்க்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்நிலையில் அருகில் இருந்த மின்சார வயர்களும் அறுந்து விழுந்துள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பொக்லைன் ஏந்திரம் மூலம் லாரியை பள்ளத்தில் இருந்து மீட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.