Categories
மாநில செய்திகள்

CORONA: தமிழகத்தில் மீண்டும் புதிய கட்டுப்பாடுகள்….? வெளியான மிக முக்கிய தகவல்….!!!!!

தமிழகத்தில் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. தொற்று கண்டறியப்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளை அதிகப்படுத்த சுகாதாரத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். தமிழ்நாட்டில் பிஏ5 என்ற ஒமைக்ரான் பாதிப்பு 25 சதவீதம் வரை தற்போது பரவி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை தொடர்ந்து செய்தாலே கொரோனா தொற்றை தடுக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். ஒமிக்ரான் வைரஸ் பல்வேறு வகைகளில் உருமாறி பரவி வருகிறது. புதிய கட்டுப்பாடுகளுக்கி தற்போது வாய்ப்புகள் இல்லை என்று கூறியுள்ளார்.

Categories

Tech |