Categories
அரசியல்

செல்வாக்கை நிரூபித்த ஓபிஎஸ்…. மிரண்டு போய் நிற்கும் இபிஎஸ்….!!!!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் சூடுபிடித்துள்ளது. அதிமுகவில் பெரும் பரபரப்பு நிலவி வரும் சூழலில் நேற்று அதிமுக பொதுக்குழு கூடியது. இந்த பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் 11ஆம் தேதி மீண்டும் கூடும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து பொதுக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தது. இந்நிலையில் பொதுக்குழுவை புறக்கணித்துவிட்டு டெல்லி சென்ற ஓபிஸ் தரப்பு தேர்தல் ஆணையத்தை நாடியுள்ளது.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், நேற்று வரை மட்டுமே ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளராகவும், வைத்திலிங்கம் துணை ஒருங்கிணைப்பாளர் ஆகவும் இருந்தனர் என்று குறிப்பிட்டார். மேலும் ஓபிஎஸ்சின் ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியானதால் இனி ஓபிஎஸ் பொருளாளர் மட்டும் தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளரான திரவுபதி முர்மு பிரதமர் மோடி முன்னிலையில் சற்று முன் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது பிரதமர் அருகிலேயே ஓபிஎஸ் இருந்தார். இந்த நிகழ்வு பிரதமரிடம் தனக்கிருக்கும் செல்வாக்கை ஓபிஎஸ் தற்போது வரை தக்க வைத்துள்ளார் என்பதை வெளிப்படையாகக் காட்டுகிறது. இன்னும் சற்று நேரத்தில் அதிமுக விவகாரம் குறித்து பிரதமரிடம் ஓபிஎஸ் பேச உள்ளதால் டெல்லியில் இருந்து இபிஎஸ் க்கு அழைப்பு வரலாம் என்று கூறப்படுகிறது.

 

Categories

Tech |