Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

உடல் சூட்டை குறைக்கும் ருசியான வெந்தயக்களி..!!!

வெந்தயகளியில் இருக்கும் மருத்துவ குணங்கள்:

வெந்தயக்களி நம் உடலில் சூட்டை தனித்து குளிர்ச்சியை அளிக்கும். பருவம் அடைந்த பெண்களுக்கு உடலில் ஏற்பட கூடிய சூட்டினால் வெள்ளைப்படுதல் இருக்கும், அப்போது உடல் மெலிந்து காண படுவார்கள்.

அதற்கு வாரத்தில் ஒரு முறையாவது வெந்தயக்களி சாப்பிடுங்கள். உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும், அது மட்டுமில்லாமல் எலும்புகள் பலம் அடையவும், வளரவும் இது உதவி புரியும்.

தேவையான பொருட்கள்:

வெல்லம் அல்லது கருப்பட்டி – 300 கிராம்

சுக்குதூள்                                          – அரை தேக்கரண்டி

ஏலக்காய்                                          – 4

நல்லெண்ணெய்                            – 4  தேக்கரண்டி

வெந்தயம்                                          – 500 கிராம்

பச்சரிசி                                               – 150  கிராம்

செய்முறை :

ஏலக்காய், கருப்பட்டியை பொடித்து எடுத்து கொள்ள வேண்டும். பின்னர், வெந்தயத்தை வறுத்து பொன்னிறமாக ஆக்கி அதை மிக்ஸர் ல போட்டு பொடியாக்கி கொள்ளவும்.

வெந்தய மாவு, பச்சரிசி மாவில், தண்ணீரை கலந்து தோசை மாவு பதத்திற்கு தயார் செய்து கொள்ளவேண்டும். பாத்திரத்தில் கருப்பட்டியை போட்டு அதில் தண்ணீரை ஊற்றி பாகு காய்ச்சி அதை வடிகட்டி எடுத்து கொள்ளவேண்டும்.

கரைத்து வைத்துள்ள மாவை அடுப்பில் வைத்து நன்கு கிளற வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, கைவிடாமல் கிளற வேண்டும். வெந்து வரும்போது வடிகட்டி வைத்துள்ள வெல்ல பாகை கலந்து கிளறவேண்டும்.

மாவு பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரவேண்டும். தண்ணீரில் விரலை விட்டுவிட்டு மாவை தொட்டால் அது விரலில் ஒட்டக்கூடாது. அதுவே சரியான பதம். இறுதியாக அதில் நல்லெண்ணெய் ஊற்றி கிளறி சுக்கு தூள், ஏலக்காய் தூள் கலந்திடுங்கள். மிதமான சூட்டில் சாப்பிடவும்.

 

Categories

Tech |