அசாமில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகின்றனர். அதனைதொடர்ந்து வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் ராணுவம் களமிறங்கப்பட்டு உள்ளது. அதனைபோல தேசிய மாநில பேரிடர் மீட்பு குழுவினர் போலீசாரும் இணைந்து இந்தப் மீட்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.
இந்த வெள்ளத்தால் கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து அசாமில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 104 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் 30 மாவட்டங்களில் வெள்ளம் காரணமாக 45 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக அசாமில் பள்ளிகள் திறப்பு 26ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.