கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஒருங்கிணைப்பாளர் (ஓபிஎஸ்), துணை ஒருங்கிணைப்பாளர் (ஈபிஎஸ்)தேர்தல் மற்றும் அதன் முடிவுக்கு பொதுக்குழுவில் அங்கீகாரம் பெறவில்லை என்பதால்,அந்த பதவிகள் நேற்றோடு காலாவதி ஆகிவிட்டது என சிவி சண்முகம் விளக்கம் அளித்துள்ளார்.ஏற்கனவே திருத்தப்பட்டு தான் சட்ட விதிகளுக்கு உட்பட்டு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன . ஆனால் இந்த சட்ட விதிகளுக்கு ஒருங்கிணைப்பாளர் மற்றும் வினை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பதவிகளுக்கு பொதுக்குழுவில் அங்கீகாரம் பெறாத அந்த பதவிகள் காலாவதி ஆகிவிட்டது.
இந்த பதவிகளுக்கு அதிகாரமளிக்கும் சட்ட விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்திற்கு பொதுக்குழுவில் ஒப்புதல் பெறவில்லை என்பதால் அதையும் தற்போது காலாவதி ஆகிவிட்டது. ஓபிஎஸ் தற்போது ஒருங்கிணைப்பாளர் அல்ல வெறும் பொருளாளர் மட்டுமே.அதனைப் போல இ பி எஸ் அதிமுகவின் தலைமை நிலைய செயலாளராக செயல்படுவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.