தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில், கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் கடந்த மாதம் இறுதி தேர்வு நடந்து முடிந்தது. இதையடுத்து 2022-2023ஆம் கல்வி ஆண்டு தொடங்கப்பட்டு அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டிற்கான பள்ளி நாட்காட்டி வெளியிடப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அரசு விடுமுறை மற்றும் வார விடுமுறை என மொத்தம் 148 நாட்கள் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமல்லாமல் 210 நாட்கள் பள்ளி வேலை நாட்களாக செயல்படும் என்றும் இதர பணிகளுக்கு கூடுதலாக 7 நாட்கள் செயல்படும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும் முதல்,இரண்டாம் மற்றும் மூன்றாம் பருவத் தேர்வு குறித்த அறிவிப்பு இதில் இடம் பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் நடப்பு கல்வியாண்டில் மாணவர்களுக்கு கோடை விடுமுறை ஏப்ரல் 29 முதல் 31 வரை மொத்தம் முப்பத்தி மூன்று நாட்கள் கோடை விடுமுறை அளிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.