பால்வளத்துறை அமைச்சர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் செய்வதோடு, பால் மற்றும் பால் பொருட்களையும் விற்பனை செய்து வருகிறது. இங்கு பால், தயிர், மோர், டீ, காபி, நெய் வெண்ணை, பால்கோவா, குலாப் ஜாமுன், ஐஸ்கிரீம் போன்ற பலவகையான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் ஆவின் நிறுவனங்களில் ஆவின் பொருட்களைத் தவிர மற்ற பொருட்களும் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இதன் காரணமாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பின்படி ஆவின் நிறுவனங்களில் ஆவின் பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என கூறியுள்ளார். மேலும் மற்ற பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.