கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகவி என்ற மாவட்டத்தில் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தனக்கு தொண்டை வலியும் மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக கூறி தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த மருத்துவர்கள் அந்த ரிப்போர்ட்டை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதில் அந்த நபரின் தொண்டையில் உள்ள உணவு குழாயில் இரும்பு வடிவிலான பொருள் ஒன்று சிக்கி இருப்பதை பார்த்தனர். அதன் பிறகு அந்த நபரிடம் விசாரித்தபோது, தான் எதையும் மேற்கொள்ளவில்லை என்று கூறினார்.
தொடர்ந்து அவரிடம் பேசுகையில்,தான் வழக்கமாக அருகில் இருக்கும் ஒரு கோவிலில் நீராடி அந்த நீரை பருகுவதால் தெரிவித்தார். இதையடுத்து சிகிச்சை மூலமாக அவரது தொண்டையில் சிக்கி இருந்த குட்டி கிருஷ்ணர் சிலையை மருத்துவர்கள் வெளியே எடுத்தனர். அதாவது அவர் கடவுள் பக்தியில் புனித நீரோடு சேர்த்து சிலையையும் தெரியாமல் விழுங்கியுள்ளார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.