நடிகர் சூரியின் உணவகத்தை அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் திறந்துவைத்தார்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடிகர் சூரி குடும்பத்துக்கு சொந்தமான அம்மன் உணவகத்தை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று திறந்து வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கடந்த 10 ஆண்டுகளாக இந்த உணவகம் மூலமாக மருத்துவமனைக்கு மாதம் 7000 வருமானம் வந்தது. தற்போது அது ஒரு லட்சம் மாறியுள்ளது. குறைவான விலையில் தரமான உணவை அளிப்பதை இலக்காக கொண்டு இந்த உணவகம் செயல்பட்டு வருகின்றது. இதற்கு நடிகர் சூரிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியிருந்தார்.