Categories
மாநில செய்திகள்

“காலி மதுபாட்டில் கொடுத்தால் 10 ரூபாய்”….. இப்ப இந்த பகுதியிலும் அறிமுகம்….. செம சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தின் மிக முக்கிய சுற்றுலாத் தளமாக கொல்லிமலைக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் அங்கு உள்ள மதுபான கடைகளில் மதுபானம் வாங்குவோர் காலி பாட்டில்களை கண்ட இடத்தில் வீசி செல்வதால் வனவிலங்குகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகின்றது. இதை தடுக்க வேண்டும் என்பதற்காக மது பாட்டில் ஒன்றுக்கு ரூபாய் 10 கூடுதலாக விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து மதுபானத்தை குடித்தபின் காலி பாட்டில்களை மீண்டும் கடையில் ஒப்படைத்துவிட்டு 10 ரூபாயை திருப்பி வாங்கிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.  கடந்த சில தினங்களுக்கு முன்பு நீலகிரி மாவட்டத்தில் இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து தற்போது கொல்லிமலை சுற்றுலா தளத்திலும் இந்த முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.

Categories

Tech |