தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளகாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளகாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ஜூலை 6ஆம் தேதிக்குள் தென்மேற்கு பருவமழையால் நாடு முழுமைக்கும் பரவலான மழை பொழிவு கிடைக்க வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நடப்பாண்டு 2 நாட்களுக்கு முன்னதாகவே தென்மேற்கு பருவமழை சீசன் தொடங்குகிறது.