Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அதிகரித்து வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான இணையவழி குற்றங்கள்…. புகார் தெரிவிக்க அறிமுகப்படுத்த புதிய இணையதள வசதி….!!!!!

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக அதிகரித்துவரும் இணையவழி குற்றங்களை தடுப்பதற்காக இணையதள முகவரி வெளியிடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து தெரிவிக்க இணையதள வசதி பற்றி செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தற்பொழுது இணையவழி மற்றும் கணினி வழி மூலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் இந்தக் குற்றங்களை கையாள்வதற்காக இந்திய அரசு சைபர்கிரைம் ஒருங்கிணைப்பு மையம் என்ற திட்டம் செயல்படுத்த பட்டிருக்கின்றது.

மேலும் இந்த குற்றங்கள் குறித்து புகார் தெரிவிக்க நிர்பயா நிதியின் கீழ் தேசிய இணைய வழி குற்றங்கள் பற்றி தெரிவிக்க இணையதள முகவரி வெளியிடப்பட்டிருக்கின்றது. www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரி மூலமாக புகார்களை தெரிவிக்கலாம். மேலும் இணையவழி நிதி மோசடிகள் பற்றி புகார் அளிப்பதற்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 1930 செயல்படுத்தப்பட்டு இருக்கின்றது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான இணையவழி குற்றங்களை தடுப்பதற்கு ஒத்துழைக்க வேண்டும் என அரசு ஊடகங்களில் அரசு அலுவலர்கள், தன்னார்வ அமைப்புகள் மூலமாக விழிப்புணர்வு செய்யப்பட்டுள்ளது என அதில் கூறியுள்ளார்.

Categories

Tech |