Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“27-ஆம் தேதி பெங்களூர் இன்டர்சிட்டி ரயில் வழித்தடம் மாற்றம்”…. சேலம் கோட்ட ரயில்வே அறிவிப்பு…!!!!!

பெங்களூரு இன்டர்சிட்டி ரயில் வழித்தடம் வருகின்ற 27-ஆம் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

ஓமலூர் – மேட்டூர் அணை பகுதியில் ரயில் தண்டவாள பராமரிப்பு பணி நடந்து வருவதால் வருகின்ற 27ஆம் தேதி பெங்களூர் இன்டர்சிட்டி ரயில் வழித்தடம் மாற்றம் செய்யப்பட்டு எர்ணாகுளம் கே.எஸ் பெங்களூர் செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் 9:10 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து கிளம்பி சேலம், திருப்பத்தூர், பங்காருபேட்டை, பையப்பனகள்ளி வழியாக மாற்று தடத்தில் இயக்கப்பட உள்ளது. பெங்களூர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலானது வழக்கமாக்க செல்லும் தர்மபுரி, ஓசூர், கார்மேளரம் வழியாக செல்லாது என சேலம் கோட்டை ரயில்வே அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

Categories

Tech |