இந்தியாவில் புதிய தொழிலாளர் சட்டத் திருத்தத்தை ஜூலை 1 முதல் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி தற்போது நடைமுறையில் உள்ள எட்டு மணி நேர வேலை என்பது ஒரு நாளில் 12 மணி நேரம் வரை என்றும், வாரத்தில் மூன்று நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் மாற்றம் பெறுகிறது. ஆனால் மொத்த வேலை நேரம் வாரத்தில் 48 மணி நேரத்தில் மீறக் கூடாது என்பதில் மாற்றம் இல்லை.
ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைப்படுத்த உள்ள இந்த புதிய சட்டத் திருத்தம் சம்பள விகிதத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். புதிய விதியின்படி தொழிலாளர்களின் மொத்த சம்பளத்தில் 50 சதவீதம் தொகை அடிப்படை சம்பளமாக இருக்க வேண்டும். அந்த சம்பளத்துக்கு பிஎஃப் பிடித்தம் செய்ய வேண்டும். இதனால் பிஎஃப் சேமிப்பு அதிகரிக்கும். ஆனால் கையில் வாங்கும் சம்பளம் குறையலாம். அதேநேரம் ஓய்வூதிய தொகை, கிராஜுவிட்டி தொகையும் அதிகம் கிடைக்கும்.