பாகிஸ்தானில் காகிதப் பற்றாக்குறை காரணமாக பள்ளிகளுக்கு பாடப் புத்தகம் அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே, அந்நாட்டில் திரும்ப செலுத்த கூடிய கடன் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இன்னிலையில் நிதி நெருக்கடி மற்றும் பணவீக்கத்தினால் அங்கு காகிதப் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, வரும் கல்வியாண்டில் பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக புத்தகங்களுக்கான விலையையும் நிர்ணயிக்க முடியாத நிலை நீடிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.