Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மாணவியை வீட்டிற்கு அழைத்து சென்ற காதலன்…. எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வாலிபர் மாணவியுடன் தற்கொலைக்கு முயன்ற  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் சிலம்பரசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் பத்தாம் வகுப்பு படிக்கும் 14வயது மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறினர். இதனையடுத்து சிலம்பரசன் தனது வீட்டிற்கு மாணவியை அழைத்து சென்றுள்ளார். அப்போது சிலம்பரசனின் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த சிலம்பரசனும், மாணவியும் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் 2 பேரையும் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கிருஷ்ணாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் சிலம்பரசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |