Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் நடிப்பில் உருவாகும் “வாரிசு”…. பேசு பொருளாக மாறிய போஸ்டரில் விஜய் பயன்படுத்தும் பைக்….!!!!!!

விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படத்தில் இருந்து வெளியான போஸ்டரில் இருக்கும் பைக் பற்றிதான் தற்போது பேசப்பட்டு வருகின்றது.

வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. இந்த படத்திற்கு ‘வாரிசு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.  சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷியாம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் தயாரிக்கின்றது.

அண்மையில் வெளியான படத்தின் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அதிலும் விஜய் அமர்ந்திருக்கும் போஸ்டரில் உள்ள பைக்கானது ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இந்த நிலையில் படத்திலிருந்து வெளியான போஸ்டரில் உள்ள பைக் பற்றி தற்போது அனைவரும் பேசி வருகின்றனர். இந்த பைக்கின் பெயரானது ஜாவா எஸ்சி அட்வென்சர். இந்த பைக்கை பெரும்பாலும் மலைப்பகுதிகளில் பயணம் செய்பவர்கள் பயன்படுத்துவார்கள். மேலும் இந்த பைக்கில் குறைந்தபட்ச விலை 2.5 லட்சம் ஆகும்.

Categories

Tech |