வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கணபதிபாளையம் கிராமத்தில் துரைசாமி- கிருஷ்ணவேணி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு பாலாஜி என்ற மகன் இருந்துள்ளார். இவர் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் பாலாஜி சேலம் மத்திய சிறைச்சாலையில் இருந்து விடுதலையாகி வந்துள்ளார்.
இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாலாஜி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாலாஜியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.