Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக ராசிக்கு…எதிர்ப்புகள் விலகி செல்லும்..பணம் கையில் வந்து சேரும்..!!

விருச்சிக ராசி அன்பர்களே,  இன்று மனதிற்கு ஏற்ற இனிய சம்பவங்கள் நடைபெறும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். புதியவர்களின் சந்திப்பால் உங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வீர்கள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். தொல்லை தந்தவர்கள் விலகிச் செல்வார்கள். இன்று எதிர்ப்புகள் விலகி செல்லும் . எல்லா நன்மைகளும் ஏற்படும்.
பயணம் மூலம் நன்மையை கொடுக்கும், செய்யும் காரியங்களால் பெருமை ஏற்படும். காரிய தடைகள் அவ்வப்போது இருந்தாலும், பண வரவு அதிகரிக்கும். புத்தி சாதுரியம் கூடும். குடும்பத்தில் இருந்துவந்த சண்டைகள் நீங்கி, தம்பதியர் ஒன்று சேர்வார்கள். ஆரோக்கியம் நன்றாகவே இருக்கும், நினைத்தபடி பணவரவுகள்  நீங்கள் இன்று பெறலாம்.
மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் வெற்றி வாய்ப்புகள் ஏற்படும். ஆசிரியர்களின் முழு ஒத்துழைப்பும் கிடைக்கும். இன்று முக்கியமான பணி நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெளிர் பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெளிர் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவிலேயே இருக்கும்.
அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை மற்றும் ஆரஞ்சு நிறம்

Categories

Tech |