Categories
உலக செய்திகள்

தீவிரவாத தாக்குதலுக்கு நிதி திரட்டல்…. குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை….!!!

தீவிரவாதிக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மராட்டிய மாநிலம் மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இதில் 166 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலை நடத்திய 9 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு ஹபீஸ் சையது என்பவர் தலைவராக செயல்பட்டுள்ளார். இந்த தாக்குதலை பாகிஸ்தான் நாட்டில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா இயக்கம் நடத்தியுள்ளது.

இந்நிலையில் தீவிரவாத தாக்குதலுக்கு நிதி திரட்டிய குற்றத்திற்காக ஹபீஸ் சையதிற்கு என்ற தீவிரவாதிக்கு ஏற்கனவே பாகிஸ்தான் நீதிமன்றத்தில் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த வழக்கில் தொடர்புடைய மற்றுமொரு குற்றவாளியான மஜித் என்பவருக்கும் தற்போது 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர் தற்போது லாகூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Categories

Tech |