இங்கிலாந்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையில் கன்சர்வேட்டிங் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தின் தென் மேற்கு தொகுதியான ‘டிவெர்டன் அண்ட் ஹானிடமன்’ மற்றும் வடக்கு தொகுதியான வேக்பீல்டு ஆகிய இரு தொகுதிகளின் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி.க்கள் இருவர் பாலியல் புகாரில் சிக்கி உள்ளன. இதனால் அவர்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர். அதனை தொடர்ந்து அந்த இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதன் முடிவுகள் நேற்று வெளியானது.
இதில் இரு தொகுதிகளிலும் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வி அடைந்தது. இரு முக்கியமான தொகுதிகளின் இடைத்தேர்தலில் ஆளும் கட்சி தோல்வியை சந்தித்தது பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. இதற்கிடையில் இடை தேர்தல் தோல்வியை தொடர்ந்து கன்சர்வேட்டிவ் கட்சியின் பொதுச்செயலாளர் ஆலிவர் டவுன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இது கட்சிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் தோல்விகளை கண்டு துவண்டு போகாமல் தொடர்ந்து செயல்படுவோம் என்று போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.