தமிழகத்தில் வீடு உள்ளிட்ட மின் இணைப்புகளில் ஆய்வு செய்து குறைபாடு உள்ள மீட்டர் கண்டறியப்பட்டால் அதனை அகற்றி விட்டு புதிய மீட்டரை பொருத்த வேண்டும் என்று உதவி பொறியாளர்களுக்கு மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மின்வாரியம் இலவசமாக மின்சாரம் வழங்கும் விவசாயம்,போலீசை வீடுகள் தவிர மற்ற மின் இணைப்புகளில் மின் பயன்பாட்டை கணக்கெடுப்பதற்கு மின்ப பொருத்தி உள்ளது. மேலும் வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவசமாகவும்,500 யூனிட்டுக்கு கீழ் மானிய விலையிலும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. அதற்குமேல் மின்சாரத்தை பயன்படுத்தினால் முழு கட்டணம் வசூலிக்கப்படும்.
இரு மாதங்களுக்கு ஒருமுறை வீடுகளிலும்,மற்ற பிரிவு மின் இணைப்புகளில் மாதம்தோறும் மின் ஊழியர்கள் நேரில் சென்று மின் பயன்பாட்டை கணக்கீடு செய்கிறார்கள். ஆனால் அதிக மின் பயன்பாடு உள்ள இணைப்புகளில் மின் கட்டணம் குறைவாக வருவதற்கு மீட்டரில் முறைகேடு செய்து மின் பயன்பாடு குறித்து காட்டப்படுகின்றது. இதற்கு முக்கிய காரணம் சில ஊழியர்கள் சரியாக மின் பயன்பாடு கணக்கெடுக்க செல்லாது. மேலும் மீட்டர்களில் ஏதாவது பழுது ஏற்படும் போது மின் பயன்பாடு பதிவாகவில்லை.
இது போன்ற பல்வேறு காரணங்களால் மின்வாரியத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படுகின்றது. எனவே இதனை தடுக்கும் வகையில் மின் இணைப்புகளில் தீவிர ஆய்வு செய்து குறைபாடு உடைய மீட்டர்கள் கண்டறியப்பட்டால் அவற்றை உடனே அகற்றிவிட்டு புதிய மீட்டர்கள் பொருத்த வேண்டும் என்று மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. எனவே தமிழகம் முழுவதும் உள்ள மீட்டர்கள் விரைவில் கணக்கிடப்பட உள்ளது.