ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கடுமையான போர் நிலவி வருகிறது. இந்தப் போரில் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக உக்ரைனில் இருந்து அகதிகளாக மக்கள் நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் போலந்து நாட்டில் வசிக்கும் உக்ரைன் மக்களுக்கு அந்நாட்டு அரசு உதவி செய்வதற்கு முன் வந்துள்ளது.
இவர்களுக்கு உதவுவதற்காக ஐரோப்பிய யூனியனுடன் தொடர்புடைய வங்கி இந்திய மதிப்பில் ரூபாய் 3,700 கோடி கடன் வழங்கியுள்ளது. அதன்பிறகு போலந்து நாட்டில் உக்ரைனை சேர்ந்த 50 சதவீத மக்கள் இருக்கின்றனர். இந்த மக்களுக்கு உணவு, உடை, இருப்பிடம், கல்வி, வேலை வாய்ப்பு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தையும் இலவசமாக போலந்து அரசு செய்து வருகிறது.