மீனம் ராசி அன்பர்களே, இன்று நன்மைகள் நடைபெறும் நாளாக இருக்கும். இல்லம் தேடி முக்கிய புள்ளிகள் வரக்கூடும். தொலைபேசி வழித் தகவல் தொலைதூர பயணத்திற்கு உறுதுணை புரியும். அரசியல் செல்வாக்கு மேலோங்கும். எதிர்பாராத பண வரவு இருக்கும். இன்று மற்றவர் கூறும் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகும்.
அவர்களுடன் பகை கொஞ்சம் ஏற்படலாம், பார்த்துக்கொள்ளுங்கள். சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சலும் உங்களுக்கு வரும். பணவரவை பொருத்தவரை எந்த பிரச்சினையும் இல்லை. திருப்திகரமான சூழல்தான் இருக்கிறது.
எதிர்ப்புகள் கொஞ்சம் உருவாகும். பேச்சில் மற்றும் நிதானம் இருந்தால் அந்த எதிர்ப்புகளை நீங்கள் சமாளித்து விடுவீர்கள். வியாபாரிகள் நல்ல நிலை இன்று அடைய கூடும் கூடும். வேலை தேடும் இளைஞர்களுக்கு எதிர்பார்த்தபடி வேலை வாய்ப்புகள் வந்து சேரும். இன்று உடன் பிறப்புகளால் உன்னதமான சூழல் ஏற்படும்.
கணவன் மனைவிக்கு இடையே அன்பு இருக்கும். அவ்வப்போது சின்னச் சின்ன வாக்குவாதங்கள் வந்து செல்லும். கொஞ்சம் பேச்சியில் மட்டும் இன்று நிதானத்தை கடைபிடியுங்கள், அது போதும். முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள். இன்று மாணவர்களுக்கு கல்வியில் எந்தவித தடையும் இல்லை. ஆசிரியர்களின் முழு ஒத்துழைப்பும் கிடைக்கும். சக மாணவர்களின் முழு ஒத்துழைப்பும் கிடைக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவிலேயே இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்