Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம்…. யாரும் ஏமாற்ற முடியாது…. நடிகர் சூரி தடாலடி…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனையின் வளாகத்தில் நடிகர் சூரி தனியார் உணவகத்தை கட்டியுள்ளார். இந்த உணவகத்தை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூரி, மேயர் இந்திராணி, டீன் ரத்தினவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு நடிகர் சூரி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில் விடுதலை படம் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது என்றும், இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை படத்திற்காக கடுமையாக உழைத்துள்ளார் என்றும் கூறினார்.

இதனையடுத்து விடுதலை படத்தில் பிரபல நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளது படத்துக்கு மிகப்பெரிய கௌரவத்தை கொடுத்துள்ளது. இந்தப்படம் மக்களுக்கான ஒரு படமாகவும், இந்தியாவில் முக்கியமான படமாகவும் இருக்கும் என்றும் கூறினார். அதன்பிறகு நடிகர் விஷ்ணு விஷால் தந்தையின் மீதான குற்றத்தை நிரூபிக்க காவல்துறை உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என்றும், கஷ்டப்பட்டு உழைத்த பணம் கையை விட்டு போகாது எனவும் சூரி கூறினார்.

Categories

Tech |