Categories
மாநில செய்திகள்

தமிழக நகராட்சிகளில்…. காலிப்பணியிடங்கள் ஏராளம்…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

அமைச்சர் கே.என் நேரு ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.

புதுக்கோட்டை மன்னர் ராஜகோபால தொண்டைமானின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள மன்னர் ராஜகோபால தொண்டைமான் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த விழாவில் அமைச்சர் கே.என் நேரு கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அமைச்சர் கே. என் நேரு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அதில், தமிழகத்தில் உள்ள நகராட்சிகளில் காலிப்பணியிடங்கள் அதிக அளவில் உள்ளது. இந்த காலி பணியிடங்களை நிதி பற்றாக்குறை காரணமாக நிரப்ப முடியவில்லை. இந்நிலையில் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு  தேவையான வசதிகளை செய்வதற்காக தமிழக அரசு 1,000 கோடி ரூபாய் நிதியை கடந்த 2 வருடங்களாக ஒதுக்கியுள்ளது. இந்த நிதியிலிருந்து தான் பணிகள் நடைபெறுகிறது. மேலும் தமிழக அரசின் நிதிப்பற்றாக்குறை சரியான பிறகு நகராட்சி காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும் கூறினார்

Categories

Tech |