கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், சுமார் 200 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 30 மாணவ மாணவிகளுக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து கல்லூரி விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் மேலும் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாகவும் மருத்துவக் கல்லூரி சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தற்போது அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் மாஸ்க் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது.