ரிஷபம் ராசி அன்பர்களே..!! உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும் . எதிர்பாராத வகையில் தனலாபம் கிட்டும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாகப் பேசுவார்கள். வாகன யோகம் உண்டாகும். வீடு வாங்கும் முயற்சி அனுகூலத்தை கொடுக்கும்.இன்று மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் செல்லும் ஆர்வமுடன் பாடங்களை படிப்பார்கள்.
உடல்நலனை பொறுத்தவரை நீர் சம்பந்தமான பிரச்சனைகள் கொஞ்சம் வரலாம். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். காரியத்தில் அனுகூலமும் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஒரு சின்ன விஷயத்திற்காக கூட அலைய வேண்டியிருக்கும் .பணிச்சுமை காரணமாக திடீர் கோபம் கொஞ்சம் ஏற்படலாம். பயணங்கள் ஓரளவு அலச்சல் கொடுப்பதாகவே இருக்கும்.
இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது. நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிஷ்ட்டதை கொடுக்கக் கூடிய அளவிலேயே இருக்கும். அதுமட்டுமில்லாமல். இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான எண் : 2 மற்றும் 9
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான நிறம் : நீலம் மற்றும் இளம்பச்சை