தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் பரவ தொடங்கியது. இதனால் ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று கணிசமாக குறைந்து வந்த நிலையில் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதன் தினசரி பாதிப்பு 1000 ஐ கடந்துள்ளது.
அதன்படி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் 200 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 30 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த 30 மாணவர்கள் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.