கவிஞர் கண்ணதாசனின் 96வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் அவரது திருவுருவ சிலைக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரிய கருப்பன், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், தமிழுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் பெருமை சேர்த்தவர் கண்ணதாசன். கலைஞர் கருணாநிதி காலத்திய சமகால கலைஞர் என்று புகழாரம் சூட்டினார் .
இதனைத் தொடர்ந்து பேசிய ரகுபதி, தமிழகத்தில் குழந்தைகள் மற்றும் ஆட்கள் கடத்தல் சம்பவம் நிகழ்ந்து வருகிறது. இந்திய தண்டனை சட்டத்தின்படி கடத்தலை தடுக்க போதுமான அளவு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.குற்றங்கள் அதிகரித்து வந்தாலும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து பணம் மற்றும் ஆதாயத்திற்காக கடத்தியவர்கள் உடனடியாக காவல் துறை மூலம் மீட்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மேலும் திறமையான காவல்துறை தமிழக முதல்வரின் கீழ் செயல்பட்டு வருகின்றது. இந்தியாவிற்கே வழிகாட்டும் காவல்துறை யாக தமிழகம் திகழ்வதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.