செட்டிநாடு குழம்பு என்றாலே தனி ருசி அதிலும் அசைவம் என்றால் கேட்கவே வேண்டாம். அத்தனை ருசி கொண்ட செட்டிநாடு நண்டு குழம்பு செய்வது பற்றி இந்த தொகுப்பு.
தேவையான பொருட்கள்
நண்டு – 1 கிலோ
தக்காளி – 4
பூண்டு – 10 பல்
சீரகம் – 2 டீஸ்பூன்
வெங்காயம் – 4
சோம்பு – 2 டீஸ்பூன்
மல்லி தூள் – 6 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 2 டீஸ்பூன்
மிளகு – 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவைக்கேற்ப
செய்முறை
முதலில் நண்டினை சுத்தமாக கழுவிக் கொள்ளவும்.
பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்தவுடன் தக்காளி வெங்காயம் போட்டு நன்றாக வதக்க வேண்டும்.
பின்னர் பூண்டு மிளகு சோம்பு சீரகம் நான்கையும் நன்றாக அரைத்து வதக்கிய வெங்காயத்துடன் சேர்த்து அதனுடன் மிளகாய் தூள் மல்லித்தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
அடுத்ததாக அதில் தண்ணீர் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
தண்ணீர் நன்றாக கொதித்த பின்னர் கழுவி வைத்துள்ள நண்டினை போட்டு மூடவும்.
நண்டு நன்றாக வெந்த பின்னர் குழம்பில் கொத்தமல்லி கருவேப்பிலை போட்டு இறக்கிக் கொள்ளவும்.
செட்டிநாடு நண்டு குழம்பு தயாராகிவிட்டது.