இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான குழந்தைகள் செல்போன் பார்ப்பதற்கு அடிமையாகி வருகின்றனர். இதனால் அவர்களுடைய கற்றல் திறன் குறைவது மட்டுமல்லாமல் மனரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள். இந்த நிலையில் நாம் ஸ்மார்ட்போனில் அதிகம் பயன்படுத்தும் யூடியூப், ஸ்நாப் சாட் உள்ளிட்ட 160 செயலிகளினால் குழந்தைகளை பாதிப்பதாக அமெரிக்காவின் மிக்சிகன் பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது.
குறிப்பாக மூன்று முதல் ஐந்து வயது வரையான குழந்தைகலில் 99% பேர் இச்செயகிகளில் ஒன்றிலாவது அடிமையாகி உள்ளனர் என்பது அதிர்ச்சி லியை ஏற்படுத்துகிறது. இதனால் குழந்தைகளுக்கு உடல் மற்றும் மனநல பாதிப்புகள் ஏற்படுகிறது. குழந்தைகள் இப்படி மொபைல் செயலிகளுக்கு அடிமையாவது பெற்றோர் தான் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.