நாடு முழுவதும் வருகின்ற ஜூலை 1 ஆம் தேதி முதல் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அந்த நடவடிக்கையை டெல்லி அரசு தீவிரமாக தற்போது செயல்படுத்தி வருகின்றது. அது தொடர்பாக பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள்,விற்பனையாளர்கள் மற்றும் கடைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அவ்வகையில் பிளாஸ்டிக் கழிவுகளின் உற்பத்தியை கண்காணிக்கவும்,ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை சட்டவிரோதமாக தயாரிக்கும் தொழிற்சாலைகளை கண்டறிந்து அவற்றிற்கு சீல் வைக்கும் நடவடிக்கையையும் மேற்கொண்டு வருகிறது. மேலும் வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடத்தப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
அதன்படி பலூன் ஸ்டிக்ஸ், கப்கள், போர்க்ஸ் கத்திகள், டிரேக்கள், பிளாஸ்டிக் இயர்பட்ஸ், பிளாஸ்டிக் வ்ரெப்பர், கேன்டி மற்றும் ஐஸ்கிரீம் ஸ்டிக், இன்விடேஷன் கார்ட்ஸ், அலங்காரத்திற்கான பாலிஸ்டிரின், 100 மைக்ரனுக்கு கீழான PVC பேனர்ஸ், சிகரெட் பேக்ஸ். மீறி பயன்படுத்தினால் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படலாம்.