விருதுநகர் மாவட்டத்தில் மீன் வளர்ப்பு சிறு குறு விவசாயிகள் பண்ணைக்குட்டைகள் மற்றும் மீன் வளர்ப்பு குளங்கள் ஆகியவை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் செயல்படுகிறது. விருதுநகர் மாவட்ட மீன் வளர்ப்பு மேம்பாட்டு முகமையில் பதிவு செய்ய விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மீன்வளத் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்களை பயனாளிகள் தேர்வு செய்ய முகமையில் முன்பதிவு செய்த உறுப்பினர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படுகிறது.
முகமையில் பதிவு செய்த உறுப்பினர்கள் தங்களுடைய மீன் பண்ணைக்கு தேவையான மீன்குஞ்சுகளை அரசு நிர்ணயித்த விலையில் அரசு மீன் பண்ணைகளில் எந்த ஒரு மாவட்டத்தில் இருந்தும் வாங்கிக் கொள்ளலாம் என்று விருதுநகர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். எனவே மீன் பண்ணை குட்டை அமைத்து மீன் வளர்ப்பு செய்து விரும்பும் விவசாயிகள் அனைவரும் விருதுநகர் மாவட்ட மீன் வளர்ப்பு மேம்பாட்டு முகமையில் தங்களுடைய மீன் பண்ணையை பதிவு செய்து பயன் அடைந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ள படுகிறார்கள்.