அமெரிக்க நாட்டின் கலிபோர்னியாவில் உலகிலேயே மிகவும் அழகற்ற நாய்களுக்கான போட்டியில் வெற்றி பெற்ற நாயின் உரிமையாளருக்கு 1500 டாலர்கள் பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நாட்டின் கலிபோர்னியாவில் உலகிலேயே மிகவும் அசிங்கமாக இருக்கும் நாய்களுக்கான போட்டி நடந்திருக்கிறது. வருடந்தோறும் நடக்கும் இந்த போட்டி கொரோனாவால் இரண்டு வருடங்களாக நடத்தப்படவில்லை. தற்போது, நடந்த இப்போட்டியில் மிஸ்டர் ஹேப்பி ஃபேஸ் என்னும் நாய் முதலிடத்தை பிடித்திருக்கிறது.
கருமை நிறம் கொண்ட அந்த நாய் முடி இல்லாமல், வளைந்து போன தலையுடன் உடல் முழுக்க பருக்கள் கொண்டிருந்தது. நடுவர்கள் மற்றும் பார்வையாளர்களின் கவனத்தை பெற்ற அந்த நாய் அதிகப்படியான ஆதரவுடன் முதலிடம் பிடித்தது.
எனவே, அந்த நாயின் உரிமையாளருக்கு 1500 டாலர்கள் பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது, ஜெனெடா பெனாலி என்ற அந்நாயின் உரிமையாளர், தன் நாயை தான் எப்போதும் அசிங்கமானதாக கருதவில்லை என்றும் அதிக அன்புடன் வளர்த்து வந்ததாகவும் மகிழ்வுடன் தெரிவித்திருக்கிறார்.