Categories
தேசிய செய்திகள்

“போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள்”….12 பேர் திடீர் பணி நீக்கம்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!!!!!!

போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் 12 பேரை போக்குவரத்து கழகம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்துவதை எதிர்த்து அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் நேற்று முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டாவது நாளாக இன்றும் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்வதால் அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் இயங்காமல் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு இடையே எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த ஓட்டுனர் மற்றும் நடத்துனர் 8 பேரை பணி நீக்கம் செய்து போக்குவரத்து கழக நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

பணி  பாதுகாப்பு இல்லை, பணி நிரந்தரம் செய்யவில்லை என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இரண்டாவது நாளாக நகரம் மற்றும் உள்ளூர் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதன் காரணமாக சென்னை, பெங்களூர், மார்கே, திருப்பதி போன்று தொலைதூர பேருந்துகளும் இயக்கப்படாமல் இருக்கிறது. பிஆர்டிசி ஊழியர்களின் இந்த திடீர் வேலை நிறுத்த போராட்டத்தினால் சுமார் பத்து லட்ச ரூபாய் பிஆர்டிசி நிர்வாகத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இதேபோல காரைக்கால் பகுதியில் இரண்டாவது நாளாக தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் 4 பேரை பணி நீக்கம் செய்து புதுச்சேரி போக்குவரத்து நிர்வாகம் உத்தரவிட்டிருக்கிறது.

Categories

Tech |