Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு ”யோகம் வரக்கூடிய நாளாக இருக்கும்” பொறுமையை கையாளவும்..!!.

கன்னி ராசி அன்பர்களே..!! இன்று யோகங்கள் வந்து சேர யோசித்து செயல்பட வேண்டிய நாளாக இருக்கும் .உடன்பிறப்புகளின் பகையை வளர விடாமல் தடுப்பது  ரொம்ப நல்லது. அதாவது நீங்கள் பேசும்போது கொஞ்சம் பொறுமையாகவே நடந்து கொள்ளுங்கள். முக்கிய பொறுப்புகளில் கவனம் இருக்கட்டும். குடும்பதினர்களை தயவுசெய்து அனுசரித்துச் செல்லுங்கள். செலவு கொஞ்சம் கூடலாம் .

வீண் மனக்கவலை கொஞ்சம் ஏற்படும். இடம் விட்டுவெளியே தங்க நேரிடும். எதிலும் திருப்தி இல்லாத நிலைதான் இன்று காணப்படும் .குடும்பத்தில் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிக்கவேண்டும். எதிலும் வெறுப்பும் கோபமும் கொஞ்சம் வரக்கூடும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு பின்னர் சரியாகும். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். வாடிக்கையாளரிடம் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.

இன்று மாணவச் செல்வங்கள் கொஞ்சம் பொறுமையாக இருங்கள். கல்வியில் மற்றும் ஆர்வத்தை செலுத்துங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்ட்டதை  கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும் .அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமும்  ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை        :     கிழக்கு

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான எண்          :      5 மற்றும் 6

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமானநிறம்         :      பச்சை மற்றும் வெளிர் நீல நிறம்

Categories

Tech |