தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி என்னும் ஊரில் கடலை மிட்டாய் மிகவும் பிரபலமானது. இந்த கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரயில்வே துறையின் புதிய திட்டத்தின் கீழ் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் அந்த ஊரில் புகழ்பெற்ற கடலைமிட்டாய் சிறப்பு விற்பனை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மக்களால் விரும்பி உண்ணப்படும் உணவு பண்டங்களை அவற்றின் தயாரிப்புக்கு பெயர் பெற்ற ஊரில் உள்ள ரயில் நிலையங்களில் விற்பனை செய்யும் திட்டத்தை ஒரு நிலையம் ஒரு உணவுப் பொருள் என்ற பெயரில் ரயில்வே துறை முன்னெடுத்துள்ளது. அதன்படி கோவில்பட்டி ரயில் நிலையத்தில் கடலை மிட்டாய் விற்பனை செய்ய கடை அமைக்கப்பட்டுள்ளது.