பாகிஸ்தான் நாட்டில் வஜிரிஸ்தான் மாவட்டத்தில் பிறந்து 8 மாதங்கள் ஆன குழந்தைக்கு போலியோ தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளிலேயே சில நாடுகளில் தான் போலியோ பாதிப்பு இருக்கிறது. அந்த பட்டியலில் பாகிஸ்தானும் இருக்கிறது. போலியோ தொற்றை தடுக்கக்கூடிய மருந்தை எதிர்த்து பொய் பிரச்சாரங்கள் பரப்பப்படுகிறது. எனவே, பாகிஸ்தான் அரசு முற்றிலுமாக போலியோ தொற்றை கட்டுப்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது.
அதன்படி, அந்நாட்டின் வஜிரிஸ்தான் மாவட்டத்தில் பிறந்து 8 மாதங்கள் ஆன ஒரு குழந்தைக்கு போலியோ தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து அந்த மாவட்டத்தில் போலியோவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்திருக்கிறது.