தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கி இருக்கும் நிலையில் இந்த ஆண்டு பழைய மாணவர்கள் பலர் விண்ணப்பித்து இருக்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் முதலாவதாக பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு முடிவடைந்ததும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடத்தப்பட்டு பின்பு கல்லூரிகளில் இடம் வழங்கப்படும். அதே போல இந்த ஆண்டும் பொரியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகிறது.
பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு சிறந்த கல்லூரிகளில் இடம் கிடைப்பதற்காக போட்டிகள் அதிகரிக்கலாம் கல்வியாளர் ரமேஷ் பிரபா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும் போது ‘கடந்த ஒரு நாட்களாக பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு பரபரப்பாக சென்று கொண்டுள்ளது. அந்த வகையில் நேற்று மாலை வரை சுமார் 59 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். குறிப்பாக 10,000 பேர் தங்களது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.
இவர்கள் பழைய மாணவர்களாக இருப்பார்களா என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது .கடந்த ஆண்டில் பொறியியல் படிப்புக்கான விண்ணப்பம் செய்து விரும்பிய கல்லூரிகளில் கிடைக்காத மாணவர்கள் இந்த ஆண்டு மீண்டும் விண்ணப்பம் செய்துள்ளனர். அந்த வகையில் சான்றிதழை சமர்ப்பித்து விண்ணப்பித்தவர்கள் பழைய மாணவர்களாகவும் இருக்கலாம்” என்று எதிர்பார்க்கப்படுகிறது.