இந்திய தபால் துறையின் கீழ் இயங்கும் வங்கியான இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் பள்ளி மாணவர்கள் சேமிப்பு கணக்கு தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் வழக்கம் போல் பள்ளிக்கு சென்று வருகின்றன. இந்நிலையில் சிறுவயது முதல் சேமிக்கும் பழக்கத்தை மாணவர்களுக்கு ஊக்குவிக்கும் விதமாக ஏகப்பட்ட சேமிப்பு திட்டங்கள் உள்ளது. தற்போது பள்ளி கல்லூரிகள் திறந்த நிலையில் மாணவர்களுக்கு சேமிப்பு கணக்கு விவரங்கள் பள்ளியில் சேர்ப்பது அவசியமாகும்.
அதன்படி பத்து வயது நிரம்பிய அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அருகில் உள்ள தபால் நிலையங்களில் இயங்கிவரும் இந்திய தபால் துறையின் வங்கிக்கு சென்று சேமிப்பு கணக்கை தொடங்கி கொள்ளலாம். வங்கி கணக்கில் இருப்பு தொகை எதுவும் தேவை கிடையாது. கணக்கு தொடங்கியதும் 100 ரூபாய் மட்டும் செலுத்த வேண்டும். இந்த சேமிப்பு கணக்கை தொடங்க மாணவர்கள் தங்களுடைய ஆதார் அட்டை மற்றும் செல்போன் கொண்டு வர வேண்டும். கணக்கு தொடங்கப்பட்ட பிறகு மாணவர்களுக்கு கணக்கு எண், பெயர் விவரம், ஐஎஃப்சி கோடு போன்ற விவரங்கள் வழங்கப்படும்.
அதை பள்ளியில் சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்களின் வங்கிக்கணக்கு சமர்ப்பிக்கும் இணையதளத்தில் இந்திய போஸ்ட் பைமெண்ட் பங்க் இன் விவரங்கள் ஏற்கனவே பதிவேற்றம் செய்யபட்டு இருக்கிறது. இதன் மூலமாக மாணவர்களின் விவரங்களை எளிதில் பதிவேற்றம் செய்ய முடியும். பள்ளிகளில் மாணவர்களுக்கு கணக்கு தொடங்க சிறப்பு ஏற்பாடு செய்தால், தபால் துறை அதிகாரிகள் பள்ளிகளுக்கு நேரடியாக வந்து அதிக மாணவர்களுக்கு கணக்கு தொடங்கி கொடுப்பார்கள். இந்த வங்கி சேவைகள் உதவித்தொகை பெறும் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.