பந்தலூர் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் காட்டு யானைகள் முற்றுகையிட்டு பலாப் பழங்களை தின்றது.
நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் தாலுகாவுக்கு உட்பட்ட மூலக்கடை, தட்டாம்பாறை, செம்பக்கொல்லி போன்ற பகுதிகளில் உள்ள தோட்டங்களில் வாழை, தென்னை, பாக்கு மரங்கள் இருக்கின்றது. இந்தத் தோட்டங்களில் காட்டு யானைகள் அடிக்கடி புகுந்து நாசம் செய்து வருகின்ற நிலையில் நேற்று முன்தினம் இரவு 3 காட்டு யானைகள் மூலக்கடை பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் புகுந்தது.
அப்போது அங்கிருந்த பலா மரங்களில் இருந்த பலாபழங்களை தின்ற பின் அங்கிருந்து புறப்பட்டு கொளப்பள்ளி செல்லும் சாலையில் சென்றதையடுத்து சோதனை சாவடி அருகே சாலையை காட்டு யானைகள் வழிமறித்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். இதனால் வனத்துறையினர் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள்.